ரூ.6.75 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

78பார்த்தது
ரூ.6.75 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 4 நாட்களில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் ரூ.6.75 கோடி மதிப்புள்ள 9.79 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சார்ஜா மற்றும் மஸ்கட்டில் இருந்து வந்த 2 பேர், துபாயில் இருந்து வந்த ஒருவர், கொழும்பு மற்றும் துபாயில் இருந்து வந்த 5 வெளிநாட்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.