தாட்கோ மூலம் சில்லறை வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் நடப்பு ஆண்டில் ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சில்லறை வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள், கடன் பெற்று 3 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். தாட்கோ மூலம் உருவாக்கப்பட்ட சங்கங்களின் பரிந்துரையின் பெயரில் கடன் பெறலாம். ஜெய்பீம் உழைப்பாளர் நலச்சங்கங்கள் மூலமாக 72999 13999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.