கூட்டுறவு துறையின் 71ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் உள்ள மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்
தொடர்ந்து கூட்டுறவு தொடர்பாக கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் ஆகியவற்றையும் துவக்கி வைத்தார். முன்னதாக பணியாளர்கள் அனைவரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் முன்னிலையில் நாட்டின் முன்னேற்றம் ஒருமைப்பாட்டிற்கு இயன்ற வகையில் பணியாற்றுவோம் சமாதான நல்வாழ்வை ஏற்படுத்த பாடுபடுவோம் கூட்டுறவு உறுப்பினர்கள் வாழ்க்கை தர உயரமும் வாழ்வில் பின்தங்கியுள்ள சமூகப் பொருளாதார நிலை மேம்படவும் தீவிரமாக தொண்டாற்றுவோம், கூட்டுறவே நாட்டு உயர்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற கூட்டுறவுத் துறையின் இலட்சிய உணர்வை கூட்டுறவு தத்துவங்களை கடைபிடித்து முன்னேற்றம் ஏற்பட பாடுபடுவோம் என்று உறுதிமொழி இன்று காலை சுமார் 11மணியளவில் எடுத்துகொண்டனர்.
இன்று துவங்கிய கூட்டுறவு வார விழா 20 ந்தேதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.