தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்தல் மற்றும் பிற துறைகளில் ஆர்வத்தினை உண்டாக்குதல் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி , காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி , சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.