சிவகங்கை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் RN சிங் தலைமையிலான தென்னகரயில்வே துறை அதிகாரிகள் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள் சிவகங்கை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள், பயணிகள் தங்கும் அறை , நடைமேடை தேவையான விளக்குகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அவரிடம் சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் MLA (அதிமுக) பாஜக காங் உள்ளிட்ட கட்சியினரும் வர்த்தக சங்கம் சார்பிலும் சிவகங்கை ரயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் நின்று செல்ல வேண்டிய ரயில்கள் குறித்தும் கோரிக்கை மனு வழங்கினார்கள். சிவகங்கை வழியாக இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் இரயில் இயக்கப்பட வேண்டும்.
செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் சிலம்பு இரயிலை தினசரி இயக்க வேண்டும். சிவகங்கை இரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.