போலி விசா கொடுத்து பணம் மோசடி

57பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (39) இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார் அப்போது வாட்ஸ் அப் ஃபோன் மூலம் அறிமுகமான ஒருவர் அவருக்கு லண்டனுக்கு வேலைக்கு செல்லஉதவி செய்வதாக கூறினார். இதை தொடர்ந்து சரவணக்குமார் அவர் கூறியபடி ரெண்டு தவணைகளில் ரூ 6, 50, 000 ஐ வங்கி மூலமாக அனுப்பி உள்ளார். இந்த நிலையில் அவர் லண்டனில் வேலைக்கு செல்வதற்கான விசாவை அனுப்பி உள்ளார். அந்த விசாவை சரவணக்குமார் சோதனை செய்தபோது அது போலி விசா என்று தெரிந்தது. இது தொடர்பாக சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி