சிவகங்கை: அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவி

84பார்த்தது
அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு முதல்வரின் காணொலி உரையைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற "சமத்துவ நாள்" விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில், ரூ.3.35 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் 1,014 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள், தாட்கோ, பிஎம் அஜே, என்எம்என்டி, டிஎன்சிடபிள்யூபி திட்டங்கள், சமூக பாதுகாப்பு மற்றும் வருவாய் துறைகள், மகளிர், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுகாதார உதவிகள் உள்ளிட்ட அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி