சிவகங்கை மதுரை செல்லும் சாலையில் உள்ள வியான்னி இல்லத்தில் மாவட்டத் தலைவர் ஆல்பர்ட்ராஜ் தலைமையில் தமிழக நாட்டுப்புற இசை கலை பெரு மன்ற மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மண்டல கலைப் பண்பாட்டு துறை மதுரையில் இருக்கின்ற காரணத்தினால் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை பண்பாட்டு துறை அலுவலகத்துக்கு செல்வதற்கும், நலத் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் வசதியாக சிவகங்கை மாவட்ட இசை பள்ளியிலேயே கலை பண்பாட்டு மைய அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இயல், இசை, நாடக மன்றம் சார்பில் வழங்கப்படும் கருவிசை ஆடை அணிகலன் களுக்கு தேவையான கலைஞர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க இயல் இசை நாடக மன்றத் துக்கு சிபாரிசு செய்ய தமிழக நாட்டுப்புற இசைக் கலை பெருமன்றம் உறுதுணையாக இருப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளில், சிவகங்கை மாவட்டத் தலைவராக ஆல்பர்ட்ராஜ், மாவட்ட செயலாளராக மாரிமுத்து, மாவட்ட பொருளாளராக சங்கு பாண்டி, மாவட்ட துணைத் தலைவராக மாஸ், மாவட்ட துணைச் செயலாளராக ராஜ்குமார் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.