நலத்திட்ட உதவிகள் வழங்கிய புஸ்ஸிஆனந்த்

68பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் 50 வது பிறந்ததினத்தையொட்டி சுமார் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது புஸ்ஸிஆனந்த் பேசும் போது தலைவர் விஜய் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார் என்றவர், புதிதாக கட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், வந்தாலும் முதலில் சுவரொட்டிகள் ஒட்டிய தொண்டர்களை தலைவர் விட்டு கொடுக்க மாட்டார். அதனால் தொண்டர்களை யாரும் இலக்காரமாக பார்க்க கூடாது. நமது கட்சி மக்கள் சேவை செய்யும் கட்சியாக மாறியுள்ளது. வருகிற 2026-ம் ஆண்டு எந்த தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி