சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார் விருது”, ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) கபீர் புரஸ்கார் விருதினைப் பெறத் தகுதியுடையாவராவர்கள்.
மேலும், இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள், பிற சாதி, இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ, வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையின் போதோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில், அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
கபீர் புரஸ்கார் விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு முறையே ரூ. 20, 000/- ரூ. 10, 000/- மற்றும் ரூ. 5, 000/-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை வழங்கப்படும்.
எனவே, மேற்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய நபர்கள், 2025-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கு https: //award. tn. gov. in என்ற இணையதளத்தின் வாயிலாகமட்டுமே, தங்களது விண்ணப்பங்கள்முன்மொழிவினை வருகின்ற 15. 12. 2024 ஆம் தேதிக்குள்விண்ணப்பித்திடல் வேண்டும்.