பொடுதலை கீரையுடன் வெந்தயம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். நுரையீரல் பிரச்னைகள் சரியாக இந்த கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி எடுத்துக் கொள்ளலாம். பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் பொடுகு நீங்கும். பொடுதலை இலைகளுடன் புதினா, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துத் துவையல் போல் செய்து, சோற்றுடன் பிசைந்து சாப்பிட சுவாச கோளாறுகள் நீங்கும்.