காங்கிரஸ்க்கு பேரதிர்ச்சி: கொறடா ராஜினாமா

63பார்த்தது
காங்கிரஸ்க்கு பேரதிர்ச்சி: கொறடா ராஜினாமா
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பஞ்சாப் காங்கிரஸில் இருந்து கொறடா விலகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ விக்ரம்ஜித் சிங் சவுத்ரி, சட்டப்பேரவையில் தலைமைக் கொறடா பதவியில் இருந்து இன்று(ஏப்ரல் 8) ராஜினாமா செய்தார். ஜலந்தர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக, முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னியை காங்கிரஸ் அறிவித்ததை அவர் கடுமையாக எதிர்த்தார். கட்சியின் முடிவில் அதிருப்தியடைந்த அவர், தனது கொறடா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி