பழைய பாரதத்தில் பிரிவினை என்பது அறவே கிடையாது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். மேலும் அவர், “அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம், மொழி, இனம் என்ற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். ஆனால் கலாச்சார நிகழ்ச்சிகள் மக்களை ஒன்றிணைக்கின்றன. பழைய பாரதத்தில் பிரிவினை என்பது அறவே கிடையாது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பாகுபாடு கிடையாது" என்று கூறியுள்ளது பல விவாதங்களை எழுப்பி உள்ளது.