சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 2வது நாளாக டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னையில் கடந்த செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று முன்தினம் முதல் மேற்கொண்டு வருகின்றனர். கோரிக்கை மீதான தீர்வு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதால் இன்றும் (பிப்.21) முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.