சந்தனக் கட்டைகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர்

67பார்த்தது
நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு சந்தனக் கட்டைகள் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். நாகை மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்கா புனரமைப்பு பணிக்காக தமிழக அரசு ஒதுக்கிய ரூ.2 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேற்று (நவ., 13) ஆய்வு செய்த அன்பில் மகேஷ், முதல்வரின் வழிகாட்டுதலில் கந்தூரி விழாவுக்கு சந்தனக் கட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி