சென்னையிலிருந்து கோவைக்குகாரில் வந்த என்ஜினீயர் திடீர் மாயம்

1109பார்த்தது
சென்னையிலிருந்து கோவைக்குகாரில் வந்த என்ஜினீயர் திடீர் மாயம்
சென்னை மதுரவாயல் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் வருண் (வயது 33). என்ஜினீயர். கடந்த 25-ந் தேதி கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் தனசேகரன் காரில் சென்றுள்ளார். காரை வருண் ஓட்டி வந்தார். அவர்கள் விழுப்புரம் அருகே வந்தபோது கார் அங்கிருந்த சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் காரை மட்டும் சரி செய்து கொண்டு கோவைக்கு புறப்பட்டனர். அப்போது தனசேகரன் காரை சரியாக ஓட்டமாட்டாயா என வருணை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் சேலம் அரியானூரை அடுத்த ராக்கிபட்டி அருகே வந்தபோது டீ குடிப்பதற்காக சாலையோர பேக்கரி ஒன்றில் காரை நிறுத்தினர். அப்போது வருண் மட்டும் தனது செல்போன், பர்ஸ் ஆகிவற்றை காரிலேயே வைத்துவிட்டு அங்கிருந்து மாயமானார். குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தும் வருண் கிடைக்காததால் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமாகி போன வருணை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி