மொபட்டில் இருந்த பணத்தை திருடிய வாலிபர் கைது

75பார்த்தது
மொபட்டில் இருந்த பணத்தை திருடிய வாலிபர் கைது
சேலம் டவுன் பெரியார் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி ஷர்மிளா (வயது 25). சம்பவத்தன்று இவர் அதேபகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி வந்து பார்த்த போது மொபட்டில் அவர் வைத்திருந்த ரூ. 500 மற்றும் ஓட்டுனர் உரிமம் திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து அவர் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்ட லாம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (31) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் திருடி யதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி