வி. எச். ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டீன் மோகன் திறந்து வைத்தார்

79பார்த்தது
வி. எச். ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டீன் மோகன் திறந்து வைத்தார்
சேலம் பிருந்தாவன் சாலையில் புதிதாக வி. எச். ஸ்பெஷாலிட்டி என்ற பெயரில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஆர்த்தி பிரியதர்ஷினி, தலைவர் டாக்டர் சந்திரா, ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரியில் உள்ள கே. எம். எம். சி. மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் மோகன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்து புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்த மருத்துவமனை குறித்து ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி கூறியதாவது: -
எங்கள் புதிய மருத்துவமனையில் வெரிகோஸ் லேசர் சிகிச்சை சிறந்த முறையில் அளிக்கப்படும். அதே போன்று சர்க்கரை நோய் பாதிப்புகள், சர்க்கரை நோயால் கால் புண், கால் வலி ஆகியவற்றுக்கு நவீன சிகிச்சை அளித்து குணப்படுத்தப்படும். மேலும் சிறுநீரக சிகிச்சை, ரத்த குழாய் அடைப்பு, ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை, ஸ்டண்ட் வைக்கப்படும். அதே போன்று மகப்பேறு, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சையும் சிறந்த முறையில் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி