எடப்பாடி அருகே கொங்கணாபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி விற்பனை செய்வது வழக்கம். அதன்படி, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி வாங்க வந்தனர். 300 மூட்டை பருத்தி ரூ. 6. 75 லட்சத்திற்கு விற்பனையானது. பிடி ரகம் குவிண்டால் ரூ. 6, 479 முதல் ரூ. 7, 999 வரையும், கொட்டு ரகம் ரூ. 4, 100 முதல் ரூ. 4, 899 வரையும் விற்பனையானது.