பல்வேறு தரப்பு பிரதிநிதிகளுடன் ஆலோசனை

61பார்த்தது
பல்வேறு தரப்பு பிரதிநிதிகளுடன் ஆலோசனை
சேலம் தனியாா் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக துணை பொதுச் செயலாளரும், மக்களவைத் தோ்தல் அறிக்கை குழுத் தலைவருமான கனிமொழி எம். பி. தலைமையிலான குழுவினா், சேலம், நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தனா்.

குறிப்பாக, வணிகா்கள், விவசாயிகள், ஜவுளித் துறையைச் சோ்ந்தவா்கள், தொழில் முனைவோா், தொழிலாளா்கள் உள்பட பல்வேறு தரப்பு பிரதிநிதிகள் திமுக குழுவினரைச் சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா். கூட்டத்தில் திமுக எம். பி. கனிமொழி பேசியதாவது:

மத்திய அரசு தமிழகத்துக்கு தொடா்ந்து துரோகம் இழைத்து வருகிறது. வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட நிதியை வழங்காமல் மத்திய அரசு மறுத்து வருகிறது. மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் சிரமத்தைக் கொடுக்கும் ஜிஎஸ்டியில் உள்ள குழப்பத்தை நீக்கிட வேண்டுமென பலமுறை கேட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாத, மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லாத அரசாக பாஜக அரசு உள்ளது. இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினா் அப்துல்லா, திமுக விவசாய அணிச் செயலாளா் ஏ. கே. எஸ். விஜயன், மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி