சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு

52பார்த்தது
சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு
சேலம் மாவட்டம் ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பார்வையிட்டார். தொடர்ந்து பத்திரப்பதிவில் முறைகேடுகள் ஏதாவது நடந்துள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பத்திரப்பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் அமர இடவசதி இல்லாமல் அலுவலகத்திற்கு வெளியே காத்திருப்பதை அமைச்சர் மூர்த்தி பார்த்தார். பின்னர் அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து பத்திரப்பதிவு செய்ய வருகை தரும் பொதுமக்கள் காத்திருக்க போதிய இடவசதி இல்லாததால் அலுவலக நுழைவுவாயிலில் ஏற்கனவே பத்திர எழுத்தர்கள் பயன்படுத்தி வந்த பழமையான கட்டிடத்தை பொதுமக்கள் காத்திருக்க பயன்படுத்தவும், மின்விசிறி, சேர்கள் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், அந்த கட்டிடத்தை சீரமைக்கவும் உடனடியாக ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி