சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக 534 மூட்டை தேங்காய் கொப்பரை விற்பனைக்கு வந்தது. 54 விவசாயிகள் விற்பனைக்காக தேங்காய் கொப்பரை கொண்டு வந்தனர். இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு தேங்காய் கொப்பரையை ஏலம் எடுத்தனர்.
அதிகபட்ச விலையாக ரூ. 136. 99-ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 95. 69-க்கும், சராசரி விலையாக ரூ. 136. 49-க்கும் ஏலம் போனது. நேற்று(செப்.24) மட்டும் ரூ. 30 லட்சத்து 49 ஆயிரத்து 910-க்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனதாக வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார். கடந்த சில வாரமாக தேங்காய் கொப்பரை படிப்படியாக விலை ஏறி வருவதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.