நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கல்வீச்சு

4245பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஓட்டுநர் விஜயகுமார், நடத்துனர் குப்புசாமி ஆகியோர் அரசு நகர பேருந்தை எடுத்துக்கொண்டு மேச்சேரி, எருமைப்பட்டி செல்லும் சாலையில் அரசமரத்தூர் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அங்கு மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் அவ்வழியாகச் சென்ற பொது மக்களிடம்  தகராறில் செய்து கொண்டிருந்தார்.

அப்போது மது போதை தலைக்கேறிய நிலையில்  இளைஞர் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.   பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயம் இன்றி தப்பினார்கள். இதுகுறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் ஓட்டுநர் விஜயகுமார் புகார் அளித்ததன் அடிப்படையில் தலைமறைவான போதை இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.