தேமுதிகமாவட்டசெயலாளர் தாயார்மறைவுபிரேமலதாவிஜயகாந்த் அஞ்சலி

81பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன், இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரது தாயார் சக்குபாய் இவர் உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அம்மம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்னையிலிருந்து வருகை தந்தார். அஞ்சலி செலுத்திய பின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் கழக துணை செயலாளர், சுதீஷ், பார்த்தசாரதி, முன்னல்
எம் எல்ஏ நல்லதம்பி,
சிவகொழுந்து மற்றும் அனைத்து கட்சியை சார்ந்த நிர்வாகிகளும், தேமுதிக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி செலுத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி