தலைவாசல் ஏரியில்மீன் பிடித்தவாலிபர் நீரில்மூழ்கி உயிரிழப்பு

75பார்த்தது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சதாசிவபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் பழனிமுத்து (40) இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும் பெரியசாமி என்ற மகனும் ஜீவிதா என்ற மகளும் உள்ள நிலையில் பழனிமுத்து அதே பகுதியில் சேகு ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார், இந்த நிலையில் இன்று வீட்டில் ஓய்வில் இருந்த அவர் சதாசிவபுரம் அருகே உள்ள சார் சார்வாய் புதூர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்று அப்போது ஏரியில் இருந்த புதை மண்ணில் சிக்கி உயிரிழந்துள்ளார் இதை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள் அவரது உடலை மீட்டனர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைவாசல் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வாக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் புதை மணல் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி