சேலம் மாவட்டம், ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல் மற்றும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஆர். எஸ். எஸ் பாஜகவை கண்டிக்கும் வகையில் "நமது இந்தியா நமக்கான இந்தியா, " என்ற தலைப்பில் நடைபயணம் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற நடை பயணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
பொறுப்பாளருமான சூரஜ் ஹெக்டே கலந்துகொண்டார். நடை பயணமானது உடையார்பாளையம் காந்தி சிலைக்கு மாலை அணிவித் து நடை பயணம் நான்கு ரோடு சந்திப்பு, பேருந்து நிலையம், ராணிப்பேட்டை காமராஜர் சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தி ல் நிறைவடைந்தது. நடை பயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சூரஜ் ஹெக்டே பேசும் பொழுது ; எனக்கு தமிழ் அவ்வளவாக வராது தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளவும். ஒரு சில கட்சிகள் நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் உடை உடுத்திருக்கிறீர்கள், எனபிரிவினைபேசுகின்றனர். நாங்கள் அப்படியல்ல தேசம் ஒற்றுமைக்காக ஒன்றுகூடிஇருப்பதாகவும்
நாங்கள் அரசியல் செய்ய வரவில்லை பாரததேசத்தை காப்பாற்றவந்துள்ளதாகவும், தெரிவித்தார்.