ஆத்தூர் அருகே கந்தசாமி புதூர் கிராமத்தில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கந்தசாமி புதூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொட
ங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்படித்தல் நிகழ்ச்சிவெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர்.