சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அழகாபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மர்ம நபர்கள் மூட்டை மூட்டையாக கோழிக்கழிவுகளை இரவு நேரங்களில் சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் விசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும். மேலும் அங்கு கொட்டப்படும் கோழி கழிவுகளை தெருநாய்கள் இழுத்துச் சென்று சாலையில் போடுவதால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், உடனடியாக கோழிக்கழிவுகளை கொட்டும் நபர் மீது சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.