அம்மம்பாளையம் தனியார்பேருந்து சாலையின் தடுப்பில்மோதி விபத்து

81பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் பகுதியில் ஆத்தூரில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து அம்மம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டாரஸ் லாரி முந்திச் செல்ல முயன்ற போது பேருந்து லாரியின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்து திருப்பியபோது எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி