சேலம் மாவட்டம், ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (50). கட்டிட தொழிலாளியான இவரது இரு சக்கர வாகனத்தில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். மீண்டும் இரு சக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது பாம்பு வண்டியில் உள்பகுதியில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வாகனத்தை விட்டு நகர்ந்து கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் பாம்பு பிடிப்பு கருவியை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருசக்கர வாகனத்தில் தேடி பார்த்தன. பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பெனாயிலை கொண்டு வாகன முழுவதும் தெளித்து தேடி பார்த்தும் பாம்பு சிக்காததால் அங்கிருந்து தீயணைப்புத் துறையினர் கிளம்பி சென்றனர்.