மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மணிப்பூர் அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் ஆட்சென்ட் என பதிவு செய்து அன்றைய சம்பளத்தில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு, 'நோ ஒர்க்.. நோ பே' விதியை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு அரசாங்க ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.