கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே ரூ.1,000 வங்கிகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களில் தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த மாதமே ரூ.1000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.