ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு மோடி இரங்கல்

56பார்த்தது
ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு மோடி இரங்கல்
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் நேற்று (ஏப்ரல் 9) காலமானார். அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "ஆர்.எம்.வீரப்பனின் மறைவு வேதனையாக உள்ளது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளை பிரபலப்படுத்தியவர், பொது சேவையில் பெரும் பங்காற்றியவர். திரைத்துறையிலும் சிறப்பாகா பணியாற்றியவர். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி