புகழ்பெற்ற நீரியல் நிபுணர் காலமானார்

78பார்த்தது
புகழ்பெற்ற நீரியல் நிபுணர் காலமானார்
புகழ்பெற்ற நீரியல் நிபுணர் பேராசிரியர் முனைவர் ரா.க சிவனப்பன் காலமானார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பொறியியல் முடித்த இவர், காரக்பூர் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பு முடித்தார். பின்னர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நவீன பாசன வடிகால் முறை மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றை சொட்டு நீர் பாசனம் பற்றிய கருத்துக்களை உருவாக்கி, அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார். 1956 முதல் 1986 வரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், முதன்மையராகவும் பணியாற்றினார். பாசன மேலாண்மை தொடர்பான சிறந்த ஆய்வுகளுக்காக 2005ல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

தொடர்புடைய செய்தி