திருமாவுக்காக 100 கிலோவில் தயாரான பானைகள்

67பார்த்தது
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 100 கிலோ எடையில் மண்பாண்டங்களை வடிவமைத்து, புதுச்சேரியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர்கள் பரிசளித்துள்ளனர். கட்சி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க குறுகிய நாட்களே இருப்பதால், மண்பாண்ட கலைஞர்கள் ஐடியா செய்து இதை பரிசளித்துள்ளனர். 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட ஒரு பானையை வடிவமைக்க 5 நாட்கள் ஆகியுள்ளது. இதுபோல் இன்னும் 4 பானைகள் செய்து அனுப்பி வைக்க உள்ளனர்.

நன்றி: Sun TV

தொடர்புடைய செய்தி