அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை.!

60பார்த்தது
திருவாடானைப் பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கிய நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் இன்று கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் 27 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. நடப்பு சம்பா பருவத்தில் நல்ல மழைப் பொழிவு இருந்ததால், நெல் வயல்களில் முழு விளைச்சல் ஏற்பட்டது.


நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், அண்மையில் இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயல்கள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கின.

கடந்த இரண்டு நாள்களாக வெயில் அடிக்கத் தொடங்கி விட்டது. இதனால், விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் அறுவடைப் பணிகளைத் தொடங்கி விட்டனா்.

இந்த நிலையில் அரசு அறிவித்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்காததால், தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை விற்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி