உத்தரகோசமங்கை கண்மாயில்  தண்ணீர் : விவசாயிகள் மகிழ்ச்சி.!

60பார்த்தது
உத்தரகோசமங்கை கண்மாயில்  தண்ணீர் : விவசாயிகள் மகிழ்ச்சி.!
ராமநாதபுரம் அடுத்த உத்தரகோசமங்கை பெரிய கண்மாயில் இவ்வாண்டு கோடைகாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

உத்தரகோசமங்கை பெரிய 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பகுதிக்கு சத்திரக்குடி அருகேயுள்ள தபால்சாவடி வைகை ஆறு வெள்ளப்பெருக்கின் காரணமாகவும், மழை பெய்தாலும் கண்மாய் நிரம்பும். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை வெப்பம் நிலவி வருகிறது.

இருந்த போதும் உத்தரகோசமங்கை பெரிய கண்மாயில் நீர் இருப்பதால் அந்தப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. ஆழ்துளை கிணறு, கிணறுகளில் நீர் மட்டம்குறையாமல் உள்ளது.

கடந்த பருவமழையின் போது பெய்த கன மழையால் நிரம்பிய கண்மாய் தொடர்ந்து கோடையிலும் வற்றாமல் வைகை ஆற்றில் நீர் வரத்து இருந்ததால் உத்தரகோசமங்கை பெரிய கண்மாய் பகுதியில் நீர் வறண்டு போகமால் உள்ளது. கால்நடைகளுக்கான நீர், மற்றும் நிலத்தடி நீர் மட்டம் மேம்பட்டிருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி