மாவட்ட சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள்.!

61பார்த்தது
மாவட்ட சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள்.!
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தது. இதில், ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 9 பேர் பங்கேற்றனர்.

மகளிர் பிரிவல் ஒற்றை கம்பு பிரிவில் கனிஷ்கா முதல் பரிசு தங்கமும், ஹரிஸ்மா மேனகா 2ம் இடம் வெள்ளியும், நீபா மூன்றாமிடம் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். ஆண்கள் அணி ஒற்றை கம்பு பிரிவில் தருண் 2 ஆம் பரிசு வெள்ளியும், கம்பு சண்டை பிரிவில் லித்திஹாசன், சக்தி முனீஸ், பிராபாகரன் மூன்றாம் பரிசு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இதில், மாணவி கனிஷ்கா ஜனவரியில் ராணிப்பேட்டையில் நடைபெறவுள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சாதித்த மாணவர்களை மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், பயிற்சியாளர் திருமுருகன், பெற்றோர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you