ராமநாதபுரம் மாவட்ட சமூக நலன் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் அச்சுந்தன் வயலில் தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கும் விழா நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் அரியலுார் மாவட்டம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2ம் தொகுப்பைத் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அச்சுந்தன்வயல் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0--6 மாத குழந்தைகளின் பாலுாட்டும் 860 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் விசுபாவதி, ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்