ஓபி எஸ்சை ஆதரித்து அண்ணாமலை வாக்கு சேகரிப்பு..!

2640பார்த்தது
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தேசிய கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பாஜக தமிழக தலைவர் அண்ணா மலை இன்று மதியம் ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடிக்கு பிடித்த அரசியல் தலைவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையை பெற்றவர் ஓபிஎஸ். நாடாளுமன்றம் செல்லும் போது உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும. ராமநாதபுரம் என்றால் மோடிக்கு தனி பிரியம். மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் போட்டியிடுகிறார்.

5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். ராமநாதபுரம் முதன்மை மாவட்டமாக வர வேண்டுமெனில் ஓபிஎஸ்ஸை வெற்றி. குடிநீர் பிரச்னை நீங்க ஜல் ஜீவன் திட்டம். திமுக ஆட்சியில் புதிய தொழிற்சாலை இல்லை. உலக தலைவர்கள் மோடியுடன் பேச தவம் கிடக்கின்றனர். என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

தொடர்புடைய செய்தி