சாயல்குடியில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த ராஜ கண்ணப்பன்.!

74பார்த்தது
தற்போது கடும் வெயிலை சமாளிக்க தமிழக முதல்வர் நீர், மோர் பந்தல்களை திறக்க உத்தரவிட்டதையடுத்து, ராமநாதபுர மாவட்டம் மற்றும் சாயல்குடி பேருந்து நிலையம் மற்றும் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நீர் மோர் பந்தலை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார்.

அதன்படி மோர், சர்பத், ரஸ்னா, தர்பூசணி, பைனாப்பிள், வெள்ளரிக்காய், இளநீர், நுங்கு உள்ளிட்ட கோடை கால நீர்சத்து நிறைந்த உணவுகளை பொதுமக்களுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரஸ்னா, மோர், தர்பூசணி, பைனாப்பிள் இளநீர் உள்ளிட்டவைகளை வாங்கி அருந்தினர்.

தொடர்புடைய செய்தி