கமுதி அருகே உள்ள தலைவநாயக்கன்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாதாரனைகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை காலை கோயில் முன் பொங்கல் வைத்து பக்தா்கள் வழிபட்டனா். பிறகு மாலையில் கோயிலில் இருந்து மேளதாளங்களுடன் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊா்வலமாகச் சென்று மலட்டாற்றில் கரைத்தனா். இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.