குவைத் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்.!

68பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா கடலோர மீனவ கிராமமான மோர்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த சந்துரு(25), திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சேசு(45) கார்த்திக்(25) மற்றும் திருவாடானை தாலுகா பாசிபட்டினத்தை சேர்ந்த வினோத்குமார்(27) ஆகியோர் குவைத் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்காக கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு சென்றுள்ளனர்.

அங்கு மற்ற நாட்டு மீனவர்களுடன் சேர்ந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, குவைத் நாட்டு கடற்படையினர் அவர்களது படகுகளை சோதனை செய்ததில் படகில் போதை பொருள் இருந்ததாக கூறி 4 தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது சம்பந்தமாக சிறை வைக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் அமைச்சர்களிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் கைதாகி சிறையில் இருக்கும் மீனவர்களுக்கு வருகிற மே 7-ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் அறிந்த மீனவ மக்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி