தொகுதி மறு சீரமைப்பு சிறப்பு செயற்குழு கூட்டம்

56பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் மகாலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் ரமே. பிரபாகரன் தலைமை வகித்தார்.

பரமக்குடி நகர செயலாளர் பாயும்புலி. சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

இக்கூட்டத்திற்கு மறுசீரமைப்பு குழு மேலிட பொறுப்பாளர்களான முன்னாள் மண்டல செயலாளர்கள் சொ. சு. தமிழினியன், க. முகமது யாசின், முன்னாள் மாவட்ட செயலாளர் கல்லல் திருமொழி ஆகியோர் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து எடுத்துரைத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 33 அணியில் செயல்படுவதாகவும் ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாளர்களை நியமனம் செய்து கட்சியை வலுப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.


இக்கூட்டத்தில் ஒன்றியம், நகரம், மாவட்ட துணைச் செயலாளர், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை, உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மறுசீரமைப்பு குழு வெளியிட பொறுப்பாளர்களிடம் கட்சி நிர்வாகிகள் தங்களது விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.


தற்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் தொல். திருமாவளவன் தமிழகத்தின் முதல்வராக இருப்பார் எனவும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி