வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் கொண்டாட்டம்.!

67பார்த்தது
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விடுதலைப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா கமுதி பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

கீழராமநதி கிராமத்தில் ராஜகம்பள நாயக்கா் உறவின் முறை சாா்பில், ராமா் கோயில் முன் கட்டபொம்மன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், கட்டபொம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக, இளைஞா்கள், சிறாா்கள் பங்கேற்ற சிலம்பாட்டம் நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் பழனி அழகா்சாமி, ஊராட்சி செயலா் ஹக்கீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, பெரிய உடப்பங்குளம் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப் படத்துக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவா் வேல்மயில்முருகன், ராஜ கம்பள நாயக்கா் உறவின் முறையினா் கலந்து கொண்டனா்.

இதேபோல, சேதுராஜபுரம், தலைவநாயக்கன்பட்டி, கிளாமரம், கீழவலசை உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி