இரும்பு ராடு விழுந்ததில் படுகாயமடைந்த தொழிலாளி பலி

3309பார்த்தது
விராலிமலை ஒன்றியம் நடுப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(46). மாத்துாரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலைபார்த்து வந்தார். கடந்த 6ம் தேதி பணியில் இருந்தபோது கிரேன் மீது இருந்த இரும்பு ராடு எதிர்பாராத விதமாக முருகன் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று உயிரிழந்தார். இதுபற்றி மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி