300 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!

50பார்த்தது
300 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!
புதுக்கோட்டை: குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு திருச்சி மண்டல எஸ்பி சுஜாதா மேற் பார்வையில், தஞ்சாவூர் சரக டிஎஸ்பி சரவணன் அறிவுரைப்படி புதுகை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் நெடுங்குடி கைலா சநாதர் கோயில் அருகே வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோத னையிட்டபோது, 3 சாக்கு மூட்டைக ளில் சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

பைக்கை ஓட்டிவந்த மேல்நிலைப் பட்டியை சேர்ந்த ரவி (52) என்பவரிடம் விசாரித்தபோது, பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதாக தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார் அரி சியுடன், வாகனத்தை பறிமுதல் செய் தனர். இதேபோல் மேல்நிலைப்பட்டி அம்பாள்புரம் அருகே பைக்கில் கடத்தி செல்லப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து பெரியசாமி (54) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி