அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்!

75பார்த்தது
அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்!
கந்தர்வகோட்டை ஒன்றியம், குளத்தூர் நாயக்கர்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வக்கோட்டை வட்டார செயலாளர் அ. ரகமத்துல்லா, மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி உலக சுற்றுச்சூழல் தினம் குறித்தும், மாசு கட்டுப்பாடு, மாணவர்கள் இயற்கையை காக்க செய்ய வேண்டியவை குறித்து விளக்கி பேசினார். அறிவியல் இயக்க உறுப்பினர்கள் சுதா, வாசுகி, பானுப்பிரியா, சிந்துஜா, கௌசல்யா, அனுசுயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அறிவியல் இயக்க கிளைத் தலைவர் திவ்யா வரவேற்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி