புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி: ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் கடலில் முதியவர் உடல் மிதப்பதாக மணமேல்குடி கடலோர காவல் படையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து கடலில் மிதந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (80) என்பதும், ஜெகதாபட்டினத்தில் தங்கி ஒரு தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மீன்பிடி தளத்தில் நின்று வேடிக்கை பார்த்தபோது, கடலில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.