தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'துடரும்'. இப்படத்தின் கதை, 2020-ல் வெளியான 'தீயாட்டம்' படத்திலிருந்து எடுக்கப்பட்டதாக அதன் இயக்குநர் சனல் குமார் சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அதோடு, தனது படத்தில் ஆட்டோ டிரைவர் கேரக்டருக்குப் பதிலாக, இதில் மோகன்லால் கார் டிரைவராக உள்ளார் என்றும் அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 'துடரும்' படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.